2026–2027 கல்வியாண்டு — நாள்காட்டி

📄 PDF சேமிக்க

12.08.2026 (புதன்)

தமிழ்த்திறன் போட்டி 2026 கையேடு அனுப்புதல்.

30.08.2026 (ஞாயிறு)

வளர்தமிழ்ப் பாடநூல் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2026 முடிவுகள் பள்ளிகளுக்கு அனுப்புதல்.

10.09.2026 (வியாழன்)

ஆசிரியவளமாக்கல் தொடர் செயலமர்வுகள் ஒவ்வொரு மாதமும் வரும் 2வது வியாழக்கிழமைகளிலும் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை நற்பணிக்குழாம் மூலமான இணையவழிச் செயலமர்வுகளாக நடைபெறும்.

13.09.2026 (ஞாயிறு)

வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் பள்ளி நிர்வாகிகளுடனான நேரடிச் சந்திப்பும், ஆண்டு கணக்கறிக்கை சமர்ப்பித்தலும்.

13.09.2026 (ஞாயிறு)

வளர்தமிழ் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2026 இன் இலத்திரனியற் தேர்வுவினாக்கள் அனுப்புதல்.

20.09.2026 (ஞாயிறு)

தமிழ்மொழிப்பொதுத்தேர்வு 2026 தேர்வுமுடிவுகள் மீளச்சரிபார்த்தல் விண்ணப்ப இறுதிநாள்.

20.09.2026 (ஞாயிறு)

வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் பள்ளிகளுக்கான தமிழ்த்திறன் போட்டிகளுக்கான புள்ளியிடல் பற்றிய இணையவழி விளக்கம். (2ம் வார இறுதி)

08.10.2026 (வியாழன்)

மாதாந்த ஆசிரியவளமாக்கல் செயலமர்வு இரவு 8.30 மணி.

31.10.2026 (சனி)

வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் நேரடிப்பயிற்சிச் செயலமர்வு (இடைக்கால தவணை விடுமுறையில்).

12.11.2026 (வியாழன்)

மாதாந்த ஆசிரியவளமாக்கல் செயலமர்வு இரவு 8.30 மணி.

22.11.2026 (ஞாயிறு)

வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் பள்ளிகளுக்கான தமிழ்த்திறன் 2026 இறுதிப்போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவு நாள். தமிழ்த்திறன் போட்டிகள் — திருக்குறட்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, வரலாற்றுப்போட்டி போன்றவற்றில் பள்ளிகளில் 1ஆம், 2ஆம், 3ஆம் இடம் பெற்றவர்கள் TEDC-UK இறுதிப்போட்டிக்காக விண்ணப்பங்கள் அனுப்பும் இறுதி நாள்.

06.12.2026 (ஞாயிறு)

வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் பள்ளிகளுக்கான தமிழ்த்திறன் 2026 இறுதிப்போட்டிகள். (1ம் வார இறுதி)

10.12.2026 (வியாழன்)

மாதாந்த ஆசிரியவளமாக்கல் செயலமர்வு இரவு 8.30 மணி.

13.12.2026 (ஞாயிறு)

வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் பள்ளிகளுக்கான தமிழ்த்திறன் 2026 இறுதிப்போட்டி முடிவுகள் அனுப்புதல்.

27.12.2026 (ஞாயிறு)

14.02.2027 ஞாயிறு நடைபெறவுள்ள மாணவர் பரிசளிப்பு விழா 2027 இற்கு பங்கு பெறவுள்ள மாணவர்களுக்கானதும் நிர்வாகிகளுக்குமான அழைப்பிதழ் அனுப்புதல்.

14.01.2027 (வியாழன்)

மாதாந்த ஆசிரியவளமாக்கல் செயலமர்வு இரவு 8.30 மணி.

23.01.2027 (சனி) – 24.01.2027 (ஞாயிறு)

வளர்தமிழ்ப் பாடநூல் தமிழ்மொழி அரையாண்டு மதிப்பீட்டுத் தேர்வு 2027.

07.02.2027 (ஞாயிறு)

TEDC UK ஊடாக Cambridge GCE (O/L) / A/L தமிழ்மொழித் தேர்வுக்கான விண்ணப்ப முடிவுநாள்.

11.02.2027 (வியாழன்)

மாதாந்த ஆசிரியவளமாக்கல் செயலமர்வு இரவு 8.30 மணி.

14.02.2027 (ஞாயிறு)

பரிசளிப்பு விழா 2027. வளர்தமிழ்ப் பாடநூல் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2026 இல் அதிதிறன் 1+ பெற்ற மாணவர், வளர்தமிழ் 10 முதல் வளர்தமிழ் 12 வரை சித்தியெய்திய மாணவர் மேடை மதிப்பளிப்பும் TEDC UK தமிழ்த்திறன் போட்டிகள் 2026 இன் பரிசளிப்பும் (வழமை போல இடைக்கால பருவ விடுமுறையில்).

28.02.2027 (ஞாயிறு)

வளர்தமிழ்ப் பாடநூல்களின் 2027 இறுதியாண்டுத் தமிழ்மொழிப்பொதுத் தேர்வுக்கான விண்ணப்ப இறுதிநாள். (பிந்தியவை தனியார் விண்ணப்பமாக)

06.03.2027 (சனி)

TEDC UK வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் இலண்டன் பகுதி பள்ளிகளுக்கான புலன்மொழிவளத் தேர்வு நடத்துநருக்கான செயலமர்வு 2027. (நேரடியான கணனி ஊடான மதிப்பீட்டுப் பயிற்சிகள்)

07.03.2027 (ஞாயிறு)

TEDC UK வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் வெளிமாவட்ட பள்ளிகளுக்கான புலன்மொழிவளத் தேர்வு நடத்துநருக்கான செயலமர்வு 2027. (நேரடியான கணனி ஊடான மதிப்பீட்டுப் பயிற்சிகள்)

11.03.2027 (வியாழன்)

மாதாந்த ஆசிரியவளமாக்கல் செயலமர்வு இரவு 8.30 மணி.

08.04.2027 (வியாழன்)

மாதாந்த ஆசிரியவளமாக்கல் செயலமர்வு இரவு 8.30 மணி.

01.05.2027 (சனி)

HOUNSLOW, HARROW பகுதி தேர்வு நிலையங்களில் வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் பள்ளிகளுக்கான புலன்மொழிவளத் தேர்வு 2027.

08.05.2027 (சனி)

TOOTING, MILTON KEYNES பகுதி தேர்வு நிலையங்களில் வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் பள்ளிகளுக்கான புலன்மொழிவளத் தேர்வு 2027.

09.05.2027 (ஞாயிறு)

LEICESTER தேர்வு நிலையத்தில் வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் பள்ளிகளுக்கான புலன்மொழிவளத் தேர்வு 2027.

13.05.2027 (வியாழன்)

மாதாந்த ஆசிரியவளமாக்கல் செயலமர்வு இரவு 8.30 மணி.

15.05.2027 (சனி)

ILFORD, DARTFORD, SOUTHEND பகுதி தேர்வு நிலையங்களில் வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் பள்ளிகளுக்கான புலன்மொழிவளத் தேர்வு 2027.

மே மாதம் 2027

உயிரோவியம் — பள்ளி மட்டத்திலான ஓவியப்போட்டி.

05.06.2027 (சனி)

வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் பள்ளிகளுக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வு — வளர்தமிழ் 1 முதல் 12 வரை எழுதுதல் தேர்வு 2027.

07.06.2027 – 16.07.2027

வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் பள்ளிகளுக்கான தமிழ்மொழிப்பொதுத்தேர்வு எழுதுதல் 2027 விடைத்தாள்கள் திருத்தும் பணி பிரான்சில்.

10.06.2027 (வியாழன்)

மாதாந்த ஆசிரியவளமாக்கல் செயலமர்வு இரவு 8.30 மணி.

26.06.2027 (சனி)

மேற்படி 05.06.2027 எழுதுதல் பொதுத்தேர்வு 2027 இல் தோற்றமுடியாத வளர்தமிழ் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் எழுதுதல் பொதுத்தேர்வு.

12.07.2027 (சனி)

புதிய கல்வியாண்டுக்கான வளர்தமிழ்ப் பாடநூல் விண்ணப்பம் வழங்கல்.
தேர்ந்தெடுத்த மாதம் / வகைக்கு நிகழ்வுகள் இல்லை.
குறிப்பு: தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக்கிளையின் பிராந்திய ரீதியான பெற்றோர் சந்திப்புகளுக்கான நாட்கள் பின்னர் அறியத் தரப்படும்.
👉 மேற்படி நிகழ்வுகள் தவிர்க்க முடியாத நிலைகளில் மட்டும் முன்அறிவித்தலுடன் மாற்றத்திற்குரியது. மேலதிக தகவல்கள் email / WhatsApp மூலம் அறியத்தரப்படும்.
தொடர்புகள்:
பொதுவானது: 077 7175 3525 | 020 8432 6999 | [email protected]
பாடநூல்: 075 5486 2602 | [email protected]
தேர்வு: [email protected]
கணக்குப்பிரிவு: 078 2649 3093 | [email protected]